வாழைச்சேனை
 ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம்
VALAICHENAI
SRI KAILAYAPILLAYAR MUTTUMARIAMMAN ALAYAM

valaichenai srikailayapillaiyar

Click here to edit subtitle

எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று எமது ஆலயம் புத்தெழுச்சியுடன் காட்சியளித்து வருகின்றமை எமக்கு அளவற்ற  மகிழ்ச்சியினை தருகின்றது. எனவே அனைத்து வேலைகளும் நிறைவடைந்து மகாகும்பாவிஷேகம் நடைபெற தங்கள் அனைவரது உதவியையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். 

எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி இன்றைய நிலையில் எமது ஆலயமானது மிகப் பிரமாண்டமாக புதுப்பொலிவு பெற்று வரும் இவ்வேளையில் மண்டபங்களுக்கான பிளேற் போடும் வேலைகள் எம்பெருமானின் அருளால் எம் மக்களின் உதவியுடன் இனிதே நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் பல நிர்மானப் பணிகள் அப்படியே உள்ளன. அவற்றையும் அடியார்கள் செய்ய முன்வர வேண்டும்.

இந்த வகையில் தற்போது தாமாக முன்வந்து திருப்பணி வேலைகளை பொறுப்பேற்றுள்ள எமது ஊரில் அக்கறை கொண்ட எம் உறவுகளின் விபரம் வருமாறு.
1.வாழைச்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி.கருணாநிதி சரோஜாதேவி குடும்பத்தினர் தட்சணாமூர்த்திக்குரிய பரிபாலன கோவிலை 250,000.00 செலவில் கட்டியுள்ளனர்.
2.
அவுஸ்திரேலிய  வாழைச்சேனை தமிழர் ஒன்றியம் சார்பாக சிட்னி வாழ் எமது வாழையூர் உறவுகள்
1,430,000.00
பெறுமதியான திரிதள மூலஸ்தானத்தினை அமைப்பதற்கு முன்வந்துள்ளனர் என்பதனை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இவ் வேலைகளும் மிக விரைவில் ஆரம்பமாகும்.

 

மற்றும் ஆகம விதிமுறைகளுக்கு அமைய பரிபாலன மூர்த்திகளுக்கு ஆலயங்களை கட்ட வேண்டிய நிலை இருந்தது அதற்கு அமைய நடராஜப் பெருமானுக்குரிய தனியான கோவிலின் வேலைகளை புனரமைப்புச் செய்து தருவதற்கு அடியார்கள் முன்வந்துள்ளனர்.
அத்தோடு ஐயப்ப சுவாமிக்குரிய பரிபாலன ஆலயத்தை அமைக்கும் செலவினை எமது பிரதேச ஐயப்ப பக்தர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

எனவே எமது ஊரிலும் , வெளிநாடுகளிலும் வாழும் உறவுகளே! தனவந்தர்களே! தாங்களும் முன் வந்து எஞ்சியிருக்கும் திருப்பணி வேலைகளை பொறுப்பேற்று எமது ஆலயத்தையும் ஓர் பிரசித்தமான புனிதத் தலமாக மாற்றுவதற்கு உதவி புரியுமாறு வாழைச்சேனை ஸ்ரீகைலாயப்பிள்ளையார் முத்துமாரி அம்மன் ஆலய பரிபானசபை சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.

இன்றைய நிலையில் இன்னும் பொறுப்பேற்கப்படாமல் பல திருப்பணி வேலைகள் உள்ளன. அவை வருமாறு.
1. அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் பின் பகுதியை மறைத்து சுவர் கட்டுவதுடன் , அதனுள் மடப்பள்ளி, கணக்காளர் அறை , மணமக்கள் அறை, களஞ்சிய அறை , வாகனசாலை என்பவற்றை சுவர் கட்டி பிரித்தல்.
2. ஆலயத்தின் உள், வெளிப் பிரகாரத்திற்கு கொங்றீற் போட்டு மாபிள் பதித்தல்.
3. தற்போது தட்சணாமூர்த்தி உள்ள இடத்தை பெருப்பித்து மஹாசபை அமைத்தல்.
4. தம்பப் பிள்ளையார் அமைத்தல், கொடித்தம்பம் , நந்தி,பலிபீடம் என்பவற்றுக்கான பீடங்களை அமைத்தல்.
5. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்னிணைப்பு செய்தல்.
6. தெற்கு வாயிலின் முகப்பு பக்கத்தை நிர்மானித்தல்.
7. யாகசாலையின் நிலையத்தை மாற்றி அமைத்தல்.
8. மஹாலக்க்ஷ்மிக்குரிய பரிபாலனம் அமைத்தல் அல்லது ஸ்ரீரங்க நாதருக்குரிய பரிபாலனம் அமைத்தல்.
9. வெளி வீதியினை மட்டப்படுத்தி சுற்று வீதியை அமைப்பதுடன் , ஆலய முன் , பின் புற எல்லைகளை அறுக்கைப்படுத்தல்.
10. புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள திரிதள மூலஸ்தான தூபியில் வைப்பதற்கான 72 பொம்மைகள் தேவை. அதை விரும்புவோர் பெற்றுத் தரலாம்.

 

 Contact: temple:- 065-2258511  

 தலைவர்: -0776232792 

 செயலாளர்: 077-5018778  /viber : IMO: WhatsApp-0726567918


Temple Acc.No -102-1-001-0-0000441

the bank - the People's Bank, Valaichcheni.

Account name -Sri kailayappillaiyar Muthumariamman paripalanacapai temple, Valaichcheni.

Temple Address: - Sri kailayappillaiyar Muthumariamman paripalanasapai Temple,

Kalkudah Road, Valaichenai


Gmail[email protected]                                       Facebook -Srikailayappillaiyarkovil Valaichenai                           Web-https://valaichenaisrikailayapillaiyar.webs.com

 

தற்போது  சற்றிங்  அடிக்கும் வேலைகள்  ஆரம்பமாகி  நடைபெற்று வருகிறது.

எனவே  அதனைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்து வேலைகளையும் விரைவாக  செய்து  முடிப்பதற்கு  வெளிநாடுகளில் (அவுஸ்ரேலியா, கனடா , லண்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மனி, நோர்வே, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்) வாழும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த  அனைத்து  சைவமெய்யடியார்களும் தங்களால் இயன்ற  உதவிகளை  பணமாகவோ, பொருளாகவோ  வழங்குமாறு  அன்பாக வேண்டி நிற்கின்றோம். தற்போது நடைபெற்று வருகின்ற வேலைகளின் உத்தேச செலவு விபரம்  இணைக்கப்பட்டுள்ளது.



வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார்    முத்துமாரியம்மன் ஆலய திருப்பணிச்சபை - 2016

ஆலய கட்டடத் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

முதலாம் கட்ட வேலையாக

ஸ்தம்பமண்டபம் அமைத்தல்,

சுற்றுமண்டபம் அமைத்தல்,

வசந்த மண்டப முன்வாயில் அமைத்தல்,

மணமக்கள் அறை,

களஞ்சியசாலை,

கணக்காளர் அறை,

வாகனசாலை என்பவற்றை அமைப்பதற்கான தூண்கள் போடப்பட்டு சற்றிங் அடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இவற்றை மாரிமழைக்கு முன்னர் செய்து முடிப்பதற்கு தங்களால் இயன்ற உதவியினை செய்யுமாறு ஆலயபரிபாலனசபை சார்பாகவும், திருப்பணிச்சபை சார்பாகவும் அன்பாக வேண்டி நிற்கின்றோம். வங்கிக்கணக்கிலக்கம்-102-1-001-0-0000441 , வங்கி - மக்கள் வங்கி , வாழைச்சேனை.
கணக்கின் பெயர் - ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபை , வாழைச்சேனை.
Facebook -Srikailayappillaiyarkovil Valaichenai 
Gmail [email protected]
Web - https://valaichenaisrikailayapillaiyar.webs.com
தொடர்புகளுக்கு :-ஆலயம்:- 065-2258511 ,

தலைவர்:-திரு.இ.கமலேஸ்வரன் -077-6232792
செயலாளர் :திரு.ச.வசந்தகுமார்

077-5018778 , viber /IMO-0726567918

ஆலயப் ப- திரு.மு.கணபதிப்பிள்ளை-0766075148

திருப்பணிச்சபை பொருளாளர்-திரு.க.சதாசிவம்-0766617696


எமது ஆலயம் இன்றைய நிலையில்  பல மாற்றங்களுடன்  பிரமாண்டமான ஆலயமாக எதிர் காலத்தில் திகழும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வருகிறது. எனவே  எமது மதத்திலும் , கிராமத்திலும் அக்கறை கொண்ட அடியார்கள் பலர் ஆலய கட்டட வளர்ச்சிக்கு  பொருட்களையும் , நிதியினையும் வழங்கி எமது  நிர்வாகசபையினரதும், திருப்பணிச்சபையினரதும் பாரிய திருப்பணி வேலைககுக்கு  உதவி நல்கி வருக்கிறனர். எனவே  வந்தாரை  வாழவைக்கும்  கிராமத்து மண்வாசனை மிக்க ஊரான வாழைச்சேனையில் எழுந்தருளி  அருள்பாலிக்னகும் தாய்க்கோவிலான விநாயகப் பெருமானின்  திருத்தலத்தை புதுப்பெலிவுடன் மாற்றியமைக்க  அனைவரது உதவியினையும் எதிர்பார்த்து  காத்திருக்கின்றோம்.  வருக எமது  ஆலயத்தின் நிலையறிந்து  உதவி புரிக! எனவேண்டும் நாங்கள்  ....
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார்    முத்துமாரியம்மன் ஆலய  ிி.திருப்பணிச்சபையிம்


வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார்    முத்துமாரியம்மன் ஆலய திருப்பணிச்சபை- 2016

    வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் அன்பர்களிடம் வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபையினர் வேண்டி நிற்கும் அன்பான வேண்டுகோள்.


      வாழைச்சேனை ஸ்ரீகைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமானது எமது பிரதேசத்தின் தாய்க்கோவிலாகவும், பழம்பெரும் ஆ யமாகவும் காணப்பட்டு வந்த நிலையில் அதன் தொன்மைக்கும், பழமைக்கும் ஏற்றாற்போல் தோற்றம் நீண்டகாலமாக பொலிவிழந்து காணப்படுவதால் எமது நிருவாகத்தினர் பாலஸ்த்தாபனம் செய்தவுடன் பிரமாண்டமான ஓர் ஆலயத்தினை அமைக்க திருப்பணிசபையினை
      அமைத்து புனர்நிர்மான வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே எம்முடன் ஒவ்வொரு இந்துக் குடிமகனும் இணைந்து உதவிக் கரம் நீட்டி எம்பெருமானின் மஹாகும்பாவிஷேகம் 2017 இல் சிறப்பாக நிறைவுற ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலயபரிபாலனசபை சார்பாக அன்பாக வேண்டுகின்றோம். 


      ஆலயத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனருத்தாரன திருப்பணி வேலைகள்
      1.மூலஸ்தான புனரமைப்பு
      2.ஸ்தம்ப மண்டப நிர்மானிப்பு ( பிளேற் போடுதல்)
      3.ஆலய மடப்பள்ளியும் , குருக்கள் விடுதியும் அமைத்தல்.
      4.வசந்த மண்டப தெற்கு திசை வாயில் அமைத்தல்.
      5.கொடித்தம்பம் மாற்றுதல்.
      6.வர்ணம் அடித்தல்.      8.மணமகள் அறை புனரமைப்பு செய்தல்.
      9.வாகனசாலை திருத்துதல்.   10.களஞ்சியசாலை நிர்மானிப்பு
      11.கணக்காளர் அறை புனரமைப்பு செய்தல்.   

        12.ஆவணக்காப்பகம் நிர்மானம் செய்தல்.
      13.வெளிமண்டபக் கூரையின் மீதி வேலைகளை நிறைவு செய்தல்.
      14.சுற்று மண்டபத்திற்கு தரை போடுதல்.         
      15.ஆலயத்தின் முன் பக்க, பின் பக்க வளாக எல்லைகளை அறுக்கைப்படுத்தல்.
      16.தேர் , திருமணம் செய்வதற்கான சப்புறம் செய்தல்.
      17.சுற்று மண்டப தூண்களில் பொம்மைகள் அமைத்தல்.
      18.ஆலயத்தினுள் சமய அறிவை புகட்டும் இந்து சமய வாசிகசாலை அமைத்தல்.
      19.கும்பாவிஷேகத்துக்கான செலவீனங்கள்      

      20.இராஜகோபுர நிர்மானிப்பு

       

    கைலாயத்தில் கடைந்தெடுக்கப்பட்ட தங்கமுக விநாயகராம் வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வானது இனிதே நடைபெற்று முடிந்துள்ள இக்கால கட்டத்தில்  30.05.2016ம் திகதியின் பின்னர் ஆலயக் கட்டுமானத் திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று  வருகின்றது அனைத்து சைவமெய்யடியார்களும் தங்களால் இயன்ற நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்கி திருப்பணி வேலைகள் யாவும் நிறைவடைந்து எதிர்வரும் 2017ம் ஆண்டு மகாகும்பாவிஷேகம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலயபரிபாலனசபை சார்பாகவும் திருப்பணிச்சபை சார்பாகவும் பணிவன்பாக வேண்டி நிற்கின்றோம்.
    ஆலய நிர்வாகம்


Facebook -Srikailayappillaiyarkovil Valaichenai

Gmail [email protected]

Web - https://valaichenaisrikailayapillaiyar.webs.com

0652258511 , 0775018778

Click here to edit text